ADDED : மே 02, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கீழ் இயங்கும் குறிஞ்சிப்பாடி வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குறிஞ்சிப்பாடியில் நடந்த கூட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரவை கவுரவத் தலைவராக வேல்முருகன், தலைவராக பிரபு, பொதுச் செயலாளராக குமார், பொருளாளராக வசந்தகுமார், துணை தலைவர்களாக பக்கிரிசாமி, நாகமுத்து (எ) ரமேஷ், துணை செயலாளர்களாக எழிலரசன், பாரதிராஜா, சுரேந்திரன், சீனு, சுதாகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பகுதி தலைவர்கள், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கும் 42வது வணிகர் சங்க மாநாட்டில் திரளாக பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சிவக்குமார் நன்றி கூறினார்.