sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செய்தி சில வரிகளில்

/

செய்தி சில வரிகளில்

செய்தி சில வரிகளில்

செய்தி சில வரிகளில்


ADDED : அக் 03, 2024 11:09 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காமராஜர் நினைவு நாள்


சிதம்பரம் கீழ வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, முன்னாள் தமிழக காங்., தலைவர் அழகிரி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று காந்தி மற்றும் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நகர தலைவர் மக்கின, மாநில செயலாளர்கள் சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், நகர செயல் தலைவர் தில்லை குமார், வட்டார தலைவர்கள் சுந்தர்ராஜன், செழியன், மாவட்ட செயலாளர் சின்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பரசன், மாநில விவசாய அணி தலைவர் இளங்கீரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா பங்கேற்றனர்.

காந்தி ஜெயந்தி விழா


காட்டுமன்னார்கோவிலில் காங்., கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு காங்., மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, இளைஞர் காங்., முன்னாள் பொதுச் செயலாளர் கமல் மணிரத்தினம், துணைத் தலைவர் ராமன், வட்டார தலைவர்கள் சங்கர், திருவரசமூர்த்தி, அன்வர், இதயத்துல்லா, ஷானு ஜாகீர்,மகளிர் அணி கரோலின், அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புவனகிரி


புவனகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் ராம்குமார் தலைமை தாங்கினார். காங்., மாவட்ட துணைத் தலைவர்கள் விநாயகம், கண்ணன், முன்னாள் பருத்தி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் ராஜாராமன், செல்வராஜ், மாசிலாமணி முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் பாரதி, பாலமுருகன், பரதூர் சரவணன், மணிவண்ணன், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீனஸ் பள்ளி


சிதம்பரம், வீனஸ் குழுமப் பள்ளிகளில் நடந்த காந்தி பிறந்தநாள் விழாவில், தாளாளர் குமார் தலைமை தாங்கினார். துணை தாளாளர் ரூபியால் ராணி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்கள் நரேந்திரன், லியோ பெஸ்கி ராவ், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வள்ளி விலாஸ் ஆலயா பள்ளி


நெல்லிக்குப்பம் வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் காந்தியின் கொள்கைகள் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக பேச்சுப்போட்டி, நாடகங்கள் நடத்தப்பட்டது. காந்தி வேடமணிந்து வந்த மாணவர்கள், அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமைஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

லட்சுமி சோரடியா பள்ளி


கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளி காந்திஜெயந்தி விழாவில் பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா வரவேற்றார். கடலுார் சர்வோதியா சங்கத்தை் சேர்ந்த கணேசன் மற்றும் பசுபதி முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் சந்தோஷ்மல் சோர்டியா சிறப்புரையாற்றினார். உதவி தலைமையாசிரியர் பத்தாகான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லோகேஷ் செய்திருந்தனர்.

நெல்லிக்குப்பத்தில் காந்தி ஜெயந்தி


நெல்லிக்குப்பம் நகராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு சேர்மன் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கமிஷனர் கிருஷ்ணராஜன், இன்ஜினியர் வெங்கடாஜலம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். காங்., சார்பில் காந்தி, காமராஜர் படங்களுக்கு மாவட்ட தலைவர் திலகர், நகர தலைவர் ரவிக்குமார் மாலை அணிவித்தனர். மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் ஜெயமூர்த்தி, செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.






      Dinamalar
      Follow us