
தீயணைப்பு விழிப்புணர்வு
பண்ருட்டியில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து தீயணைப்பு துறை சார்பில், விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு ஒத்திகை செயல்முறை நடத்தி காண்பித்தனர்.
அப்துல்கலாம் பிறந்தநாள்
பண்ருட்டியில் அப்துல் கலாம் அமைதிப் புரட்சி இயக்கம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில் இயக்க நிறுவனர் சுதாகர் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, பரமேஸ்வர பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் தேவநாதன், அரிமா சங்க அருண் கார்த்திக் முன்னிலை வகித்தனர். என்.சி.சி.அலுவலர் ராஜா வரவேற்றார். டி.எஸ்.பி..ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாணவர்களுக்கு எழுது பொருள் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம், மூர்த்தி, புருேஷாத், சிலம்பரசன் கலந்து கொண்டனர். மோகன்பாபு நன்றி கூறினார்.
குட்கா விற்றவர் கைது
பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் கிராமத்தில், மளிகை கடையில், புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கூலிங் லீப் விற்ற மணியரசனை, 25; கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வருவாய்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் செல்வமணி தலைமை தாங்கினார். இதில், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விருத்தாசலம், நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
பெட்டிக்கடைக்காரர் கைது
குள்ளஞ்சாவடி போலீசார், புலியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புது தெரு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட கூல்-லிப் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதே ஊரை சேர்ந்த சண்முகம், 51, என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
பட்டாசு விற்றவர் கைது
பண்ருட்டி அடுத்த சொரத்துாரை சேர்ந்தவர் முருகன்,51; இவர், அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்தார். தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், முருகனை கைது செய்தார். அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீராணத்தில் பேரிடர் ஒத்திகை
சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லையில், வீராணம் ஏரியில் நடந்த ஒத்திகை பயிற்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., ஜெயநிலா, ஊராட்சி தலைவர் ஜெயந்திகுரளரசன், துணைத் தலைவர் புகழேஸ்வரன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுரேஷ், அசோக்குமார் தலைமையில், நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் மூலம் விளக்கினர்.
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
நெய்வேலி எல்.ஐ.சி., கிளை முகவர்கள் சங்கம் சார்பில், கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்த வேண்டும், பாலிசிக்கான ஜி.எஸ்.டி., யை முற்றிலும் நீக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. முகவர் சங்க கவுரவ தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
சங்க தலைவர் அரவிந்த், செயலாளர் சந்தானம், பொருளாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் வீரமணி, வெங்கட்ராமன், பாபு, லுார்துநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.