/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலோக கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்
/
உலோக கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்
ADDED : அக் 30, 2025 07:32 AM

நெய்வேலி அக்.30-: என்.எல்.சி., பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் பயன்பாடற்ற உலோகக் கழிவுகள் மற்றும் தேவையற்ற கழிவுப் பொருட்களை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.
நெய்வேலியில் என்.எல்.சி.,முதல் சுரங்கம், முதல் சுரங்கம் 1 ஏ மற்றும் இரண்டாம் சுரங்கம் என 3 பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது.
இதில் முதல் சுரங்கத்தில் உற்பத்தி பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, என்.எல்.சி., இந்தியா நிறுவனம் பெருமளவிலான தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுரங்கப் பகுதிகளில், பயன்பாடற்ற உலோகக் கழிவுகள் மற்றும் தேவையற்ற கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுரங்கம் 1ஏ- பகுதியில் 18.5 மெட்ரிக் டன் உலோகக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.
அதேபோல், இரண்டாம் சுரங்கத்திலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளின்போது, 17.78 மெட்ரிக் டன் எடையுள்ள உலோகக் கழிவுகள் மற்றும் தேவையற்ற கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டது.

