ADDED : ஜன 18, 2026 06:02 AM

பண்ருட்டி: பண்ருட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.சத்யாபன்னீர்செல்வம் வீட்டின் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,
109-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் முன்னிலையில் சுந்தரவாண்டியை சேர்ந்த கபிலன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து 50 பேர், அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதற்கு முன்னதாக வீரப்பெருமாநல்லுாரில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் முன்னிலையில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து , கட்சி கொடி ஏற்றி இனிப்பு, அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

