ADDED : பிப் 09, 2026 04:03 AM

மந்தாரக்குப்பம்: அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளராக சிவசுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஊமங்கலம் அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவசுப்ரமணியம், கடலுார் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளராக நியமிக்க, மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, சிவசுப்ரமணியத்தை கடலுார் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற இணை செயலாளராக நியமனம் செய்தார். இதையெடுத்து, சிவசுப்ரமணியத்திற்கு அ.தி.மு.க., நகர செயலாளர் மனோகரன், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் அன்வர்தீன், பேரூர் அவைத்தலைவர் சங்கர், ஊமங்கலம் கிளை தலைவர் பெரியசாமி, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ரமேஷ், கட்சி நிர்வாகிகள், ஹோண்டா ஷோரூம் ஊழியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
