/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : டிச 25, 2025 06:02 AM

கடலுார்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கடலுார் அ.தி.மு.க., தெற்கு மாவட்டம் சார்பில், நினைவு தினம் அனுசரிக்கபட்டது.
கடலுார் அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில், நிர்வாகிகள் தொண்டர்கள் முன்னிலையில், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 9ல் உள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து குறிஞ்சிப்பாடி கடை வீதியில் உள்ள காந்தி சிலையில் இருந்து முக்கிய கடை வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆரின்., உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நினைவு தினத்தையொட்டி, ஏராளமானோருக்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் அன்னதானம் வழங்கினார்.
ஜெ., பேரவை துணை செயலாளர் சிவசுப்ரமணியன், வழக்கறிஞர் ராஜசேகர், ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், வடக்குத்து கோவிந்தராஜ், கமலக்கண்ணன், வினோத், நகர செயலாளர் பாபு, ஆனந்தபாஸ்கர், முத்துலிங்கம் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்..

