/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற எதிர்ப்பு; கடலூரில் திடீர் பரபரப்பு
/
எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற எதிர்ப்பு; கடலூரில் திடீர் பரபரப்பு
எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற எதிர்ப்பு; கடலூரில் திடீர் பரபரப்பு
எம்.ஜி.ஆர்., சிலை அகற்ற எதிர்ப்பு; கடலூரில் திடீர் பரபரப்பு
ADDED : மார் 02, 2024 05:59 AM

கடலுார் : கடலுார், புதுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார், புதுப்பாளையம் கடைத் தெரு நான்குமுனை சந்திப்பில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., சிலை வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிலை சேதமடைந்ததால் அதை புதிதாக சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விரைவில் திறக்க புதிய எம்.ஜி.ஆர்., சிலையை நேற்று மாலை 4:00 மணிக்கு அதே இடத்தில் அ.தி.மு.க., வினர் வைத்தனர்.
தகவலறிந்த தாசில்தார் பலராமன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்து, சிலை வைக்க அனுமிதியில்லை எனக் கூறி அகற்ற முயன்றனர்.
இதற்கு அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க., பகுதி செயலாளர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் மணிமாறன், துரைராஜ், அருண், எத்திராஜ், நாகராஜ், வெங்கடேசன், அழகப்பன், பன்னீர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
பின், ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்த இடத்தில் தான் சிலை வைப்பதாக கூறி அதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். புதுநகர் போலீசார், அ.தி.மு.க., வினரை சமாதானம் செய்து அனுப்பினர்.

