/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுாரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
/
பு.முட்லுாரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
ADDED : ஜன 18, 2024 04:41 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், அகத்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஷ்வர் ராஜலிங்கம், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் வரவேற்றார்.
எம்.ஜி.ஆர்., சிலைக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார்.
மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, பொதுக்குழு உறுப்பினர் சிவ சிங்காரவேலு, நகர செயலாளர் தமிழரசன், ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ், நிர்வாகிகள் பாலமுருகன், கல்யாணசுந்தரம், நாகராஜ், சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.