/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
ADDED : ஜன 17, 2025 06:26 AM

பரங்கிப்பேட்டை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட கட்சி நிர்வாகிகளுக்கு கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர், பாண்டியன் எம்.எல்.ஏ., வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று 17ம் தேதி கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சிதம்பரம் வண்டிகேட்டில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகுட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வார்டுகளில் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
நாளை 18ம் தேதி கிள்ளை கடைவீதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. காட்டுமன்னார்கோவிலில் வரும் 21ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது.
பொதுக்கூட்டத்திற்கு தலைமை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், மன்றம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.