/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ADDED : ஜன 20, 2025 11:49 PM

கடலுார்; கடலுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.
முன்னாள் அமைச்சர், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார் வரவேற்றார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு (எ) ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கந்தன், வினோத்ராஜ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேசினார்.
பொதுக் கூட்டத்தில் ராஜகோபால், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மருத்துவரணி தலைவர் சீனுவாசராஜா, மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், மாணவரணி தேவேந்திரன், கிளை நிர்வாகி சங்கர், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, முன்னாள் ஒன்றிய சேர்மன் பக்கிரி, வர்த்தக பிரிவு வரதராஜன், ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், பொருளாளர் ஜானகிராம், மருத்துவரணி கிருஷ்ணன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ராமசாமி, நாகபூஷ்ணம், தமிழ்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பகுதி செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.