/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்
/
நெய்வேலியில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்
ADDED : ஜன 18, 2025 02:15 AM

கடலுார்: தமிழத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நெய்வேலி வட்டம் 9-ல் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்ரமணியன், பக்தரட்சகன், மாநில அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராஜசேகர், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வடக்குத்து கோவிந்தராஜ், பாஷ்யம், வினோத், பண்ருட்டி கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி ஆனந்தபாஸ்கரன், சுப்பிரமணியன், முத்துலிங்கம், கல்யாணசுந்தரம், தங்கப்பன், அன்பு, லோகநாதன், சஞ்சீவி, தங்கரத்தினம், ராமலிங்கம், பெருமாள், வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.