/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம்
ADDED : ஜன 20, 2025 06:27 AM

கிள்ளை : சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கிள்ளையில், நடந்தது.
கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் வரவேற்றார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் தமிழ்மணி துவக்க உரையாற்றினார்.
கூட்டத்தில், கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், தலைமைக் கழக பேச்சாளர் பாபு முருகவேல் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள் தேன்மொழி, செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, பாஸ்கர், இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் சிவராஜன், அன்புஜீவா, செந்தில்குமார், கலைமணி, மணிமாறன், மாயகிருஷ்ணன், தனிபிறவி, வெள்ளையதேவன், கலைமணி, அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தென்றல் சிவக்குமார் நன்றி கூறினார்.