ADDED : ஏப் 03, 2026 07:56 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் துணை ராணுவப்படை வீரர்கள், போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மங்கலம்பேட்டையில் துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஊர்வலம் துவங்கியது.
கடைவீதி, திரவுபதி அம்மன் கோவில் தெரு, புது நெசவாளர் தெரு, சுமைதாங்கி, வாணியர் தெரு, சுப்ரமணியர் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், மாரியம்மன் கோவில் தெரு வழியாக ஊர்வலமாக வந்து, அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்திட வலியுறுத்தப்பட்டது.
துணை ராணுவ வீரர்கள் 50 பேருடன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரதாப்சந்திரன், பார்த்தசாரதி, சரவணன், லோகேஷ்வரன், டிராபிக் கோவிந்தசாமி உட்பட ஊர்க்காவல்படை வீரர்கள், போலீசார் பங்கேற்றனர்.
