ADDED : ஏப் 04, 2025 04:50 AM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
பரங்கிப்பேட்டை, மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவிலில், 10ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து கோவிலை வந்தடைந்தனர்.
பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
