/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரிய நாயகி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
பெரிய நாயகி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஆக 10, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் பெரியநாயகி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரம் சாலையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி நேற்று காலை சிறப்பு அபிேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
இதேப் போன்று, கூடலுார், சாத்தநத்தம், வையங்குடி கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தி, பாலபிேஷகம் செய்தனர்.

