தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மினி மாரத்தான் போட்டி

 மினி மாரத்தான் போட்டி

 மினி மாரத்தான் போட்டி


ADDED : ஜன 17, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: வெண்கரும்பூர் மினி மாரத்தான் - 2026 குழு மற்றும் பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில், 4ம் ஆண்டு 'மினி' மாரத்தான் போட்டி விருத்தாசலத்தில் நடந்தது.

சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.விருத்தாலத்தில் இருந்து வெண்கரும்பூர் வரை 13 கி.மீ., துாரம் நடந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் ஊட்டியை சேர்ந்த நிக்கில் என்பவர், 41 நிமிடம் 23 வினாடியில் வெற்றி இலக்கை அடைந்து முதல் பரிசினை பெற்றார்.

அதேபோல், பெண்கள் பிரிவில் மயிலாடுதுறையை சேர்ந்த சஸ்வத்தி என்பவர் 52 நிமிடம் 30 வினாடிகளில் வெற்றி இலக்கை அடைந்து முதல் பரிசினை பெற்றார்.

இரு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பந்தய துாரத்தை கடந்த வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், குழு தலைவர் மேனாக்ஷா, பொருளாளர் நாகராஜன், கவுரவ தலைவர் கருதிருமன், பெண்ணாடம் அரிமா சங்க தலைவர் வசந்தராஜ், செயலர் வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us