தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதல் த.வெ.க., பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி

இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதல் த.வெ.க., பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி

இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதல் த.வெ.க., பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி


ADDED : செப் 04, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: சிதம்பரம் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில், இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதியதில், த.வெ.க., பிரமுகர்கள் உட்பட மூவர் இறந்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மேல்குறியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைமணி மகன் குகன்,24; த.வெ.க., முகாம் செயலாளர். கீழ் குறியாமங்கலத்தை சேர்ந்தவர் கலைராஜன்,47; த.வெ.க. கிளை செயலாளர். எலக்ட்ரீஷியன்களான இருவரும் நேற்று காலை வேலைக்கு பைக்கில் சிதம்பத்திற்கு சென்றனர். அங்கு, வேலை இல்லாததால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காலை 10:00 மணிக்கு சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் மண்டபம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த டி.என்.32–பிஎச்–9013 பதிவெண் கொண்ட மினி டெம்போ, கலையரசன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதிவிட்டு, முன்னாள் சென்ற ேஹாண்டா யூனிகான் பைக் மீது மோதியது.

அதில், குகன் மற்றும் ேஹாண்டா யூனிகான் பைக்கில் சென்ற திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார்,29: என்ற ஜோசியரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த கலைராஜன் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த கலையரசனுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும், அஜித்குமாருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். குகனுக்கு திருமணமாகவில்லை.

இந்த விபத்து குறித்து, கலையராஜன் மனைவி திலகவதி கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இரு பைக்குகள் மீது மினி டெம்போ மோதிய விபத்தில், மூன்று பேர் பரிதாபமாகஇறந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us