தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'மினி' பஸ் போக்குவரத்து பயணிகள் கோரிக்கை

 'மினி' பஸ் போக்குவரத்து பயணிகள் கோரிக்கை

 'மினி' பஸ் போக்குவரத்து பயணிகள் கோரிக்கை


ADDED : மார் 01, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: மினி பஸ் போக்குவரத்தை முறைப்படுத்த, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை மினி பஸ் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்தாண்டு, 'மினி' பஸ் சேவையை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

இந்த பஸ் நாள் ஒன்றுக்கு, 3 முறை சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் சரியான முறையில் இயங்காததால், பொதுமக்கள் அவதிய டைந்துள்ளனர்.

ரயில் வரும் மற்றும் புறப்படும் நேரத்திற்கு ஏற்றார்போல், பஸ் போக்குவரத்தை இயக்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us