/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் விபத்தில் மாணவர்கள் பலி சம்பவம்; பிறந்த நாள் நிகழ்ச்சிகளை தவிர்த்த அமைச்சர்

ADDED : ஜூலை 09, 2025 08:15 AM

விருத்தாசலம் : ரயில் விபத்து காரணமாக பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை அமைச்சர் தவிர்த்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன். இவரது 63வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, விருத்தாசலம் நகர தி.மு.க., சார்பில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அன்னதானம் மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கழுதுாரில் உள்ள அவரது கல்லுாரியில் 2000 பேருக்கு இறைச்சி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலை 8:00 மணியளவில், கடலுார், செம்மங்குப்பத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவ, மாணவியர் இறந்த கோர சம்பவம் நடந்தது.
தகவலறிந்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவத்தால் மனமுடைந்த அமைச்சர் கணேசன், தனது பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை தவிர்த்தார். மேலும் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் எனவும், தயாரிக்கப்பட்ட உணவுகளை வீணாக்காமல் ஏழை எளியோருக்கு வழங்குமாறு நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.