/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழக்கறிஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு
/
வழக்கறிஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., வழக்கறிஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாவட்ட செயலாளர் கணேசன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் வழக்கறிஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நாளை (1ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது.
சட்டத்துறை செயலர் இளங்கோ எம்.பி., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வரும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை வழங்குகிறார். இதில், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.