/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையங்கள் திறப்பு அமைச்சர் அழைப்பு
/
சுகாதார நிலையங்கள் திறப்பு அமைச்சர் அழைப்பு
ADDED : ஜன 30, 2024 06:28 AM

சிறுபாக்கம், : விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவில் பங்கேற்க அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, காந்தி நினைவு நாளையொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (30ம் தேதி), மங்கலம்பேட்டையில் காலை 9:00, மணியளவில் நடக்கிறது. மேலும், திட்டக்குடி சட்டசபை தொகுதியில், மங்களூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மற்றும் 17 அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் திறக்கப்படுகிறது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைக்கிறார். எனவே, கடலூர் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட தி.மு.க., நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், செயலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.