/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெருமுனை பிரசார கூட்டம் அமைச்சர் அழைப்பு
/
தெருமுனை பிரசார கூட்டம் அமைச்சர் அழைப்பு
ADDED : நவ 29, 2024 04:48 AM

சிறுபாக்கம்: தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்டத்தில் நடக்கும் தெருமுனை பிரசார கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்க மேற்கு மாவட்ட செயலர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை; தி.மு.க., இளைஞரணி செயலர், துணை முதல்வர் உதயநிதி 48வது பிறந்தநாளையொட்டி, தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்டத்தில் தி.மு.க., அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடக்கிறது.
திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளை சேர்ந்த 48 இடங்களில் 30ம் தேதி பிரசார கூட்டம் நடக்கிறது. அதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நகர, பேரூர், ஒன்றிய, கிளை, வார்டு செயலர்கள், அனைத்து சார்பு அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.