தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளருக்கு அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2026 03:55 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் ஓட்டு சேகரித்தார்.
புவனகிரி தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊமங்களம், ஊத்தங்கால், வெளிக்கூனங்குறிச்சி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், ஊ.அகரம், இருப்புக்குறிச்சி உட்பட, 14 கிராமங்கள் மற்றும் தேவலாயங்களில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணனனை ஆதரித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் ஓட்டு சேகரித்தார்.
அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, காங்., வட்டார தலைவர் ராஜேஷ், தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
