/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் அமைச்சர் கணேசன் ஆய்வு
/
வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் அமைச்சர் கணேசன் ஆய்வு
ADDED : டிச 14, 2024 05:39 AM

திட்டக்குடி : தொடர் கனமழை காரணமாக நிரம்பிய, கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்புகிறது. திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கமும் நிரம்பி வருகிறது. வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்பிடிப்பு 29.72 அடியில் 26.10 அடி நிரம்பியுள்ளது. மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கனஅடியில் 1,740 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், வெலிங்டன் ஏரியின் நீர்மட்டம், கரைகள், ஷட்டர்கள் மற்றும் பாசன வாய்க்கால் பகுதிகளை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறையினரிடம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து மற்றும் கரைகள், ஷட்டர் பகுதிகளை கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.