/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.80 கோடியில் குடிநீர் தொட்டி அமைச்சர் கணேசன் அடிக்கல்
/
ரூ.1.80 கோடியில் குடிநீர் தொட்டி அமைச்சர் கணேசன் அடிக்கல்
ரூ.1.80 கோடியில் குடிநீர் தொட்டி அமைச்சர் கணேசன் அடிக்கல்
ரூ.1.80 கோடியில் குடிநீர் தொட்டி அமைச்சர் கணேசன் அடிக்கல்
ADDED : ஜூலை 05, 2025 03:26 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சியில் 1 கோடியே 80 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினார்.
பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி, சோழன் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து. இயக்குதல் மற்றும் பராமரித்தல் திட்டத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேப் போன்று, திருமலை அகரம் கிழக்கு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார். துணை சேர்மன் குமரவேல், இளநிலை எழுத்தர் ரமேஷ், பேரூராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.