/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 10, 2025 02:28 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, சுகாதார இணை இயக்குனர் மணிமேகலை, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா முன்னிலை வகித்தனர். தாசில்தார் உதயகுமார், நகராட்சி சேர்மன் வெண்ணிலா, துணை சேர்மன் பரமகுரு உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் கணேசன் முகாமை துவக்கி வைத்து, அரசின் சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மு காமில், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம், பல், தோல், எலும்பு, நரம்பியல், சித்தா, யுனானி உட்பட அனைத்து பிரிவுக்கும் தனித்தனி அரங்குகள் அமைத்து மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது.

