UPDATED : ஜூன் 20, 2026 04:54 PM
ADDED : ஜூன் 20, 2026 04:50 PM

திட்டக்குடி:வெலிங்டன் நீர்த்தேக்க கரைகள் புனரமைப்பு, மதகுகள், தடுப்பணை உள்ளிட்ட கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள் புனரமைப்பு மற்றும் பாசன வாய்க்கால்கள் துார்வாருதல், மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ. 130 கோடியில் கடந்தாண்டு துவங்கி நடந்து வருகின்றன.
இப்பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், சுதர்ஷன், கவுதமன், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாய சங்க நிர்வாகி மருதாசலம் உட்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, திட்டக்குடி அடுத்த புதுகுளம் கிராமத்தில் பெரிய ஓடையின் குறுக்கே, மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூ. 9 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை அமைச்சர் ராஜ்குமார் பார்வையிட்டார்.
