ஒருங்கிணைந்து ஓட்டு சேகரிப்பு :அமைச்சர் அறிவுறுத்தல்
ஒருங்கிணைந்து ஓட்டு சேகரிப்பு :அமைச்சர் அறிவுறுத்தல்
ADDED : மார் 26, 2026 08:21 PM

ராமநத்தம்: ஒருங்கிணைந்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட, மங்களூர் வடக்கு ஒன்றிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிறுபாக்கத்தில் நடந்தது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், சின்னசாமி, அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ், வெங்கடேசன், திருவள்ளுவன், குமணன், சேகர், நிர்மல்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் கணேசன் பேசியதாவது.,
திட்டக்குடியில் உள்ள ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி உட்பட தொகுதி முழுவதும் தி.மு.க.,வின் கோட்டையாக திகழ்கிறது.
கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய சாதனை திட்டங்களை விளக்கி கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
