/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உள்ளாட்சிகளுக்கு 5 ஆயிரம் பொறியாளர்கள் அமைச்சர் நேரு தகவல்
/
உள்ளாட்சிகளுக்கு 5 ஆயிரம் பொறியாளர்கள் அமைச்சர் நேரு தகவல்
உள்ளாட்சிகளுக்கு 5 ஆயிரம் பொறியாளர்கள் அமைச்சர் நேரு தகவல்
உள்ளாட்சிகளுக்கு 5 ஆயிரம் பொறியாளர்கள் அமைச்சர் நேரு தகவல்
ADDED : மார் 05, 2024 04:39 AM
சிதம்பரம்: உள்ளாட்சி அமைப்புகளில் 5 ஆயிரம் பொறியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நகராட்சியில் நடந்த திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் பேரூராட்சிகளுக்கு ரூ. 4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 1972ல் கருணாநிதியால் துவங்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இதுவரை 544 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் முதல்வரான பின், ஆண்டுக்கு 1.17 லட்சம் பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சி துறைக்கு ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடியும், ஊராட்சி துறைக்கு ரூ. 21ஆயிரம் கோடி நிதி வழகப்பட்டுள்ளது.
நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி துறைகளில் மொத்தமுள்ள 8 ஆயிரம் பொறியாளர்களில் தற்போது 2 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதனால், புதிதாக 5 ஆயிரம் பொறியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கடலுார் மாவட்டத்திற்கு ரூ.419 கோடியில் திட்டப் பணிகளுக்கு வரைவு அறிக்கை கொடுத்து நிதி கோரியுள்ளார். முதல்வரிடம் தெரிவித்து நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

