/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
234 தொகுதிகளிலும் வெற்றி அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
/
234 தொகுதிகளிலும் வெற்றி அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
234 தொகுதிகளிலும் வெற்றி அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
234 தொகுதிகளிலும் வெற்றி அமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை
ADDED : ஏப் 28, 2025 05:57 AM

பரங்கிப்பேட்டை : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தி திணிப்பு, நிதிப்பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் கலையரசன், மனோகர், ராஜேந்திரகுமர், சங்கர், பேரூர் செயலாளர்கள் ரவிந்திரன், முனவர் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், மஞ்சு, பேரூராட்சி தலைவர்கள் தேன்மொழி சங்கர், மல்லிகா முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ' அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். உழைத்தால் உங்களைத் தேடி பதவி வரும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். மகளிர் உரிமைத் தொகை வருவதால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் விவசாயிகள் போராடினால் கூட அவர்களுக்கு எதுவும் கிடைக்காது' என்றார்.
பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், செல்வமணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கதிரவன், தொகுதி பார்வையாளர் பாரிபாலன் உள்ளிட்டோர் பேசினர்.
வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில்ராஜா நன்றி கூறினார்.

