/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவிலில் டயாலிசிஸ் மையம் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
/
காட்டுமன்னார்கோவிலில் டயாலிசிஸ் மையம் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
காட்டுமன்னார்கோவிலில் டயாலிசிஸ் மையம் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
காட்டுமன்னார்கோவிலில் டயாலிசிஸ் மையம் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
ADDED : ஆக 29, 2025 03:09 AM

காட்டுமன்னார் கோவில்: காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில், ரோட்டரி சார்பில், ஹீமோ டயாலிசிஸ் மையம் துவக்க விழா மற்றும் எம்.எல்.ஏ., நிதியில், மையத்திற்கான உபகரணங்கள் ஒப்படைப்பு விழா நடந்தது, நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., சிந்தனை செல்வன், மருத்துவத்துறை இணை இயக்குனர் குமார் (பொறுப்பு)., ரோட்டரி சங்க ஆளுநர்கள் லியோன், ரமேஷ்பாபு, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயசெல்வி வரவேற்றார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் , ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார்.
மேலும் எம்.எல்.ஏ., நிதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் மையத்திற்கான ஜெனரேட்டர், ஆக்சிஜன் உற்பத்தி சாதனம்,சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேசிய மருத்துவ திட்டம் மருத்துவர் சிறுநீரக நிபுணர் மருத்துவர் திருமுருகன்,பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி, ரோட்டரி நிர்வாகிகள் சத்தியதாசன், அல்போன்ஸ், ஆரோக்கியராஜ், கௌதமன் மற்றும் பலர் பங்கேற்றனர். உதவி ஆளுநர் எழில்சிவா நன்றி கூறினார்.

