/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாகும் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
/
விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாகும் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாகும் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாகும் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
ADDED : அக் 01, 2024 06:50 AM

கடலுார்: விளையாடுவதால் ஆரோக்கியம் மேம்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியில் முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேயர் சுந்தரி ராஜா, அய்யப்பன் எம்.எல்.ஏ., கமிஷனர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் கோப்பை 2022-23 ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் விளையாட்டு ஆர்வம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளவர்கள், மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்று கடலுார் மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்க வேண்டும்.
விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெற்றி தோல்வியை எளிதாக கருதும் எண்ணங்களை உருவாக்கும். விளையாட்டு ஆர்வத்தை துாண்டும் வகையில் இவ்வாறான போட்டிகள் நடைபெறுவதால் விடாமுயற்சியை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி.ராஜாராம், விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.