/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க அரசு தீவிரம் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
/
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க அரசு தீவிரம் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க அரசு தீவிரம் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க அரசு தீவிரம் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : அக் 24, 2024 06:39 AM

கடலுார்: தமிழகத்தில் வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க 35 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் ஏற்றுமதி கருத்தரங்கு வடலுாரில் நேற்று நடந்தது.
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண் வணிகத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரகாஷ், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ., ஐயப்பன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:
வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா 10வது இடம் வகிக்கிறது. அதில் தமிழ்நாட்டின் பங்கு 6.5 சதவீதமாகும், 2022 -23 ம் ஆண்டில் 24.5 லட்சம் டன் பொருட்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், 2023 - 24ம் ஆண்டில் 25.15 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தை பொருத்தமட்டில் அரிசி, நிலக்கடலை, பதப்படுத்தப்பட்ட பழங்கள், முந்திரி, மக்காச்சோளம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளரி மற்றும் மாம்பழச்சாறு ஆகியவை முக்கிய ஏற்றுமதி பொருட்களாகும். மேலும், வெங்காயம், நாட்டுசர்க்கரை, மாவுவகைகள், காய்கறிகள், மலர்கள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பால்சார்ந்த பொருட்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அதன் தேவை மற்றும் ஏற்றுமதி அளவை அதிகரிக்கலாம்.
இதனை கருத்தில் கொண்டு மாநிலத்தின் தனித்துவமான 35 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
கருத்தரங்கில் மாநில ஆத்மா குழுத்தலைவர் சிவக்குமார், வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குனர் பூங்கோதை, வடலுார் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நபார்டு உதவி பொது மேலாளர் சித்தார்த், கார்ப்ரேஷன் கிளை மேலாளர் சாந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.