/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் பங்கேற்பு
/
சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் பங்கேற்பு
ADDED : மே 15, 2025 11:44 PM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவியில் தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் பழனி மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் செம்புலிங்கம், ராமகிருஷ்ணன், கருணாநிதி, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய துணை செயலாளர் செல்வராசு வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் ராமகிருஷ்ணன், ஷிபானாமரியம்பீவி ஆகியோர் தி.மு.க.,வின் நான்காண்டு சாதனையை விளக்கி பேசினர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. காலை உணவு, திட்டம், முதியோர் உதவித்தொகை, புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம், குணபாலன், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாரசாமி, துறைமணிராஜன், பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.