/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
/
உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
ADDED : நவ 10, 2024 06:16 AM

கடலுார் : உடல் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.
இறந்தவர்களின் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆபத்தாரணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் மனைவி ஹேமலதா, 34; இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக கடந்த 8ம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், அவரது உறவினர்கள் சம்மதத்துடன் ேஹமலதா உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல்வம் ேஹமலதா உடலுக்கு நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன் உடனிருந்தனர்.