/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலம் வழங்கியவர்களுக்கு அமைச்சர் பாராட்டு
/
நிலம் வழங்கியவர்களுக்கு அமைச்சர் பாராட்டு
ADDED : ஏப் 24, 2025 06:57 AM

கடலுார்; குறிஞ்சிப்பாடி தாலுாக  அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, புது சுப்பிரமணிய கோவில் இடத்தை வழங்கியவர்களை அமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டினார்.
குறிஞ்சிப்பாடியில் புதிய தாலுகா கட்டடம் அமைப்பதற்கு தானமாக நிலம் வழங்கிய, புது சுப்பிரமணிய கோவில் நிர்வாகத்தினருக்கும், நிர்வாக அறங்காவலர்கள், மேலாளர் கலியபெருமாள், முருகசாமி, சிதம்பரம் அருணாச்சலம், பழனிவேல், செல்வராஜ்,  முருகவேல், மூர்த்தி .ஜெயசங்கர், சங்கர், மணிகண்டன், மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும், அமைச்சர்,  பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்கள்.
உடன் ஒன்றிய செயலாளர் சிவகுமார், பேரூர் கழக செயலாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

