/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் நிவாரணம் வழங்கல்
/
வீடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 16, 2024 07:25 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் கணேசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், விருத்தகிரீஸ்வரர் கோவில் முன், ஆற்றின் கரையோரம் உள்ள சன்னதி தெருவில் இருந்த 10 வீடுகள் சேதமாயின.
வீடுகளை இழந்த மக்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முகாமில் தங்க வைப்பட்டனர்.
அவர்களை அமைச்சர் கணேசன் சந்திந்து நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனைபட்டா வழக்க தாசில்தார் உதயகுமாருக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், கமிஷனர் பானுமதி, தி.மு.க., நகர செயலர் தண்டபாணி, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், நகர துணை செயலர் ராமு, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் கனக கோவிந்தசாமி, சுரேஷ், இளைஞரணி கணேஷ், நம்பிராஜன் கவுன்சிலர்கள் பாண்டியன், அன்பழகன், அன்சர் அலி, வசந்தி, உஷா பாலு, ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், வழக்கறிஞர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

