/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரி கட்டடம் அமைச்சர் ஆய்வு
/
அரசு கல்லுாரி கட்டடம் அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 27, 2024 06:29 AM

சிதம்பரம் : குமராட்சியில், கட்டப்பட்டுள்ள அரசு கல்லுாரி கட்டடத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
குமராட்சியில் 8 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கல்லுாரிக்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை நேற்று அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கல்லுாரி முதல்வர் மீனா, கல்லுாரிக்கு லேப் அமைத்து கொடுக்கவும், ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், சுற்றுச்சுவர் தேவை எனவும் கோரிக்கை வைத்தனர்.
உடன், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொண்டு, உடனடியாக செய்து கொடுத்த கலெக்டருக்கு உத்தரவிட்டார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., குமராட்சி பி.டி.ஓ., சரவணன் உடனிருந்தனர்.