ADDED : ஜன 21, 2026 06:52 AM

அ நிறம் | அளவு
சிறுபாக்கம்: தி.மு.க., சார்பில் நடக்கும் மகளிர் மண்டல மாநாட்டில் பங்கேற்க சீருடையை அமைச்சர் கணேசன் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தி.மு.க., சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மகளிர் மண்டல மாநாடு, வரும் 26ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பங்கேற்கும் மகளிருக்கான சீருடையை, சிறுபாக்கம் அடுத்த கழுதுாரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தி.மு.க., நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது விருத்தாசலம் தொகுதி மேற்பார்வையாளர் குலோத்துங்கன், விருத்தாசலம் நகர செயலர் தண்டபாணி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், பாவாடை கோவிந்தசாமி, சின்னசாமி, வேல்முருகன், கோவிந்தசாமி, தி.மு.க., நிர்வாகி பாபு உள்ளிட்டோர் உடனிருந் தனர்.
