/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
17 துணை சுகாதார நிலையங்கள் மங்களூரில் அமைச்சர்கள் திறப்பு
/
17 துணை சுகாதார நிலையங்கள் மங்களூரில் அமைச்சர்கள் திறப்பு
17 துணை சுகாதார நிலையங்கள் மங்களூரில் அமைச்சர்கள் திறப்பு
17 துணை சுகாதார நிலையங்கள் மங்களூரில் அமைச்சர்கள் திறப்பு
ADDED : பிப் 01, 2024 05:58 AM

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய பகுதிகளில் 17 துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், ரூ. 4.60 கோடி மதிப்பில் 17 துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் மங்களூரில் நடந்தது. தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், 17 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கீதா ராணி, ராஜசேகரன், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, ஊராட்சி தலைவர்கள் ராமு, தேவராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் சுப்ரமணியன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மாவட்டங்கள் தோறும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறையில் உயிர் காப்பீடு திட்டங்கள், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் சுகாதார துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
எளிய மக்கள் பயன்பெற மருத்துவ முகாம், மக்களை தேடி மருத்துவம், உயரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மக்கள் வழங்கிய மனுக்கள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.