ADDED : ஜன 14, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
ராமநத்தம்: வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன், 33; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனின் உறவினர்.
ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோட்டில் வாகனங்கள் சுத்திகரிப்பு செய்யும் கடை வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணியளவில் வாகனங்கள் சுத்திகரிப்பு செய்ய மோட்டாரை இளவரசன் சுவிட்ச் ஆன் செய்ய சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அலறினார். அக்கம் பக்கத்தினர், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது சிகிச்சை பலனின்றி இளவரசன் இறந்தார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
