உங்களுக்காக உழைக்கும் என்னை வெற்றிபெற செய்யுங்கள் ;அமைச்சர் வேண்டுகோள்
உங்களுக்காக உழைக்கும் என்னை வெற்றிபெற செய்யுங்கள் ;அமைச்சர் வேண்டுகோள்
ADDED : ஏப் 06, 2026 09:19 PM

ராமநத்தம்: 36 ஆண்டுகள் உங்களுக்காக உழைத்து வரும் எனக்கு தேர்தலில் ஓட்டு போடுங்கள் என அமைச்சர் கணேசன் கேட்டு கொண்டார்.
திட்டக்குடி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் கணேசன், கல்லுார், மா.புடையூர், செவ்வேரி, புல்லுார், தொண்டாங்குறிச்சி, அரியநாச்சி, கழுதுார், சிறுகரம்பலுார் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அவருக்கு, முன்னாள் மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அமைச்சர் கணேசன் பேசியதாவது; திட்டக்குடி பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக செய்கின்றனர். இதனால், குறைந்த விலைக்கு தீவனம் கிடைக்கவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும், ரூ., 33 கோடியில் நவீன கால்நடை தீவன உற்பத்தி ஆலை கொண்டு வந்தேன். மேலும், ரூ., 50 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டது. கடந்த 36 ஆண்டுகள் உங்களுக்காக உழைக்கும் எனக்கு தேர்தலில் ஓட்டளிக்க வேண்டுகிறேன். மற்ற கட்சிகளில் வெளியூர் நபர்கள் போட்டியிடுவதால், மண்ணின் மைந்தரான எனக்கு ஓட்டு அளியுங்கள் என கூறினார்.
தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட செயலர்கள் தே.மு.தி.க., உமாநாத், சிவக்கொழுந்து உட்பட பலர் பங்கேற்றனர்.
