/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அட்டென்டன்ஸ் எடுக்கும் அமைச்சர் உடன்பிறப்புகள் கலக்கம்
/
அட்டென்டன்ஸ் எடுக்கும் அமைச்சர் உடன்பிறப்புகள் கலக்கம்
அட்டென்டன்ஸ் எடுக்கும் அமைச்சர் உடன்பிறப்புகள் கலக்கம்
அட்டென்டன்ஸ் எடுக்கும் அமைச்சர் உடன்பிறப்புகள் கலக்கம்
ADDED : மே 14, 2025 12:48 AM
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 2026 சட்டசபை தேர்தல் பணிகளை ஒரு ஆண்டுக்கு முன்பே துவங்கி விட்டது. அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள், இனி நேரடியாக மக்களை சந்திக்க வேண்டும் எனகட்சி மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடலுார் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 40 இடங்களில் தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வம், கட்சி பணி மற்றும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இதற்கிடையே சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் பன்னீர்செல்வம், கூட்டத்திற்கான நோட்டீசில் போடப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகள் பெயரையும் ஒவ்வொன்றாக கூப்பிட்டு, அட்டென்டன்ஸ் எடுக்கிறார்.
ஆப்சென்ட் நிர்வாகிகள் பெயரையும் குறிப்பெடுக்கிறார்.இதுமட்டுமின்றி ஒவ்வொரு நிர்வாகியும், எத்தனை பேரை அழைத்து வந்தனர் என கேட்டு, அவருடன் வந்தவர்களை கைகளை உயர்த்தி காண்பிக்க கூறுகிறார்
இதன் மூலமாக நிர்வாகிகள் கட்சி பணிகளில் எந்த அளவிற்கு ஈடுபாடுடன் உள்ளனர்; தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்கின்றனரா என்பது அவருக்கு நேரடியாக தெரிய வருகிறது.
மக்களை நேரிடையாக தினமும் சந்தித்து ஆட்சியின் சாதனை திட்டங்களை கண்டிப்பாக கூற வேண்டுமென, ஆலோசனை வழங்குகிறார்.
அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் கலக்கத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள், மக்களை சந்திக்க தயாராகி வருகின்றனர். அமைச்சரின் அதிரடி நடவடிக்கை, கை மேல் பலன் கிடைத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.