தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளிகளில் ஹை-டெக் லேப் முடங்கும்... அவலம்

அரசு பள்ளிகளில் ஹை-டெக் லேப் முடங்கும்... அவலம்

அரசு பள்ளிகளில் ஹை-டெக் லேப் முடங்கும்... அவலம்


UPDATED : ஆக 26, 2026 03:42 PM

ADDED : ஆக 26, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 03:42 PM ADDED : ஆக 26, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்டத்தில் காட்சி பொருளாகும் உபகரணங்கள்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகங்கள் சரியாக செயல்படாததால் உபகரணங்கள் காட்சி பொருளாகும் அவலம் உள்ளது. தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்ததும், உயர்க்கல்விக்கு செல்லும் போது, நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள், அலுவலகப் பணிகள் பெரும்பாலும் கணினி சார்ந்தவையாகவே உள்ளன. இதனால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்டம் வாரியாக உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (ஹை-டெக் லேப்) கடந்த 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 246 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினி, புரொக்ஜடர், மேல்நிலை பள்ளிகளில் 20 கணினி, புரொக்ஜடர் உள்ளிட்ட உபகரணங்களுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலமாக ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது.

கணினி இயக்குவது, பாடம் சார்ந்த தகவல் பெறுவது, ஆசிரியர், மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு விவரங்கள், அனைத்து தேர்வுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வது, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கடலுார் உட்பட மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப ஆய்வகங்கள் சரியாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆய்வகங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆய்வகங்கள் காட்சி பொருளாகவே உள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென, மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் சில பள்ளிகளில் உயர்ரக தொழில்நுட்ப ஆயவகங்கள் சரியாக இயங்கவில்லை. இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரக இயக்குனருக்கு (தொழிற்கல்வி) அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us