UPDATED : நவ 11, 2026 07:26 PM
ADDED : நவ 11, 2026 07:22 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கொலைமுயற்சி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேணு மகன் பிரதீப், 22; இவர் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த பிரதீபை கைது செய்து, விருத்தாசலம் கோர்டில் ஆஜர்படுத்தினர்.
