தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது


ADDED : ஆக 20, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: திருட்டு வழக்கில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் கோவிந்தராஜ்,26; இவரை, கடந்த 2018ம் ஆண்டு முதுநகரில் நடந்த பைக் திருட்டு வழக்கில் முதுநகர் போலீசார் கைது செய்து, கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்–2ல் ஆஜர்படுத்தினர். பின், ஜாமினில் வெளியே வந்த அவர், கடந்த 2022ம் ஆண்டு முதல், மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

அதனைத் தெடார்ந்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், கோவிந்தராஜை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, குள்ளஞ்சாவடியில் நேற்று பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us