தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.எல்.ஏ., - எம்.பி., நிதியை பயன்படுத்த வலியுறுத்துவேன் :அருண்மொழிதேவன் திட்டவட்டம்

எம்.எல்.ஏ., - எம்.பி., நிதியை பயன்படுத்த வலியுறுத்துவேன் :அருண்மொழிதேவன் திட்டவட்டம்

எம்.எல்.ஏ., - எம்.பி., நிதியை பயன்படுத்த வலியுறுத்துவேன் :அருண்மொழிதேவன் திட்டவட்டம்


UPDATED : ஜூன் 16, 2026 09:33 PM

ADDED : ஜூன் 16, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 09:33 PM ADDED : ஜூன் 16, 2026 09:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய ஊராட்சிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த எம்.எல்.ஏ., - எம்.பி., நிதியை பயன்படுத்த வலியுறுத்துவேன் என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.

கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், புவனகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் கம்மாபுரம் சிவக்குமார், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஸ்ரீமுஷ்ணம் பி.டி.ஓ., சங்கர் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில், இரு ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர், சாலை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைத்திட திட்டமிடல் பட்டியல் தயாரித்து உடனடியாக வழங்கிட வலியுறுத்தப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசியதாவது:

கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியங்களில் பழுதான சாலைகள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றை புதிதாக கட்டித்தர என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் நிதியுதவி தருமாறு மனு கொடுத்துள்ளேன். என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணியால் குடிநீர் மாசடைந்துள்ளது.

ஆனால், எம்.எல்.ஏ., - எம்.பி., நிதியில் குடிநீர் பிரச்னைக்கு பயன்படுத்த முடியாத வழிமுறைகள் உள்ளன. இது தொடர்பாக சட்டசபையில் பேசி, அதற்குரிய மாற்றத்தை கொண்டு வர வலியுறுத்துவேன். மேலும், கிராம சாலைகளை சீரமைத்திட கலெக்டரிடம் நேரில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சிப் பதவிகள் காலியாக உள்ள நிலையில், இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்தை நேரில் சந்தித்து, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த பலரும், உயர் பதவிகளில் இருப்பதால், அவர்களை நேரில் சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், கம்மாபுரம் - தேவங்குடி உயர்மட்ட பாலம் வழியாக 10 நிமிடத்தில் ஸ்ரீமுஷ்ணம் செல்லும் நிலையில், இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us