எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு தே.மு.தி.க.,வினர் உற்சாகம்
எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு தே.மு.தி.க.,வினர் உற்சாகம்
ADDED : மே 15, 2026 04:00 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சீல் திறக்கப்பட்டதால், தே.மு.தி.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம், தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும் வருவாய்த்துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
முன்னதாக, முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தரப்பில் போடப் பட்டிருந்த ஏ.சி., சோபாக்கள் உள்ளிட்ட பொருட்களை காங்., நிர்வாகிகள் தாங்களாகவே அப்புறப் படுத்திக் கொண்டனர்.
சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா வெற்றி பெற்ற நிலையில், தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் நேற்று எம்.எல்.ஏ., அலுவலகம் சீல் அகற்றப்பட்டது.
தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், மோகன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். ஓரிரு நாட்களில் பொதுப்பணித் துறையினரால் சுத்தம் செய்யப்பட்டு, எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட உள்ளதால், தே.மு.தி.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
