/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழிப்புணர்வு கூட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
விழிப்புணர்வு கூட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : அக் 05, 2025 03:23 AM

நெய்வேலி : நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட முத்தாண்டிக்குப்பத்தில் கடலுார் மின் பகிர்மான வட்டம் சார்பில் பிரதம மந்திரி சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சோலார் நிறுவனங்களுடனான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 'சூரிய ஒளி சோலார் திட்டத்தின் மூலம் மின் இணைப்புகளை பயனாளிகள் பெற்று, அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி பயனடைய வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், கடலுார் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி, செயற் பொறியாளர்கள் கண்ணகி, பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, டி.இ., சி வக்குமார், பி.டி.ஓ., மீரா, தொகுதி பார்வையா ளர் துரைசாமி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ் குமார், குணசேகரன், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.